ஜம்மு காஷ்மீரில் 6 ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் உள்ள மச்சி என்ற இடத்தில் ராணுவ நிலை அமைக்கப்பட்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

6 Army men part of 12 people killed in Jammu Kashmir

இந்நிலையில், இன்று அங்கு திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த 5 ராணுவ வீரர்கள் சிக்கிக்கொண்டார்கள். 

இதனையடுத்து, உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பனியில் புதைந்த வீரர்களை மீட்க முடியவில்லை. இதனால், அவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே, இன்று காலையில் திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், ஒரு ராணுவ வீரர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

6 Army men part of 12 people killed in Jammu Kashmir

மேலும், அங்குள்ள கந்தர்பால் மாவட்டம் ககன்கிர் பகுதியிலும் இன்று திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், பொதுமக்கள் சுமார் 9 பேர் சிக்கினர். பின்னர், விரைந்து வந்த மீட்புப் படையினர், 4 பேரை மீட்டனர். ஆனால், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.