டெல்லி அருகே வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதன் பின்பு டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் டெல்லி அருகே காஸிப்பூரில் போராடும் விவசாயிகளை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் இருந்து பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர். ஆனால் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்க சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.


தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன், உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். விவசாயிகளை எம்.பி.க்கள் சந்திப்பு நிகழ்ந்தால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்பதால் டெல்லி காவல்துறை எம்.பி.க்களை தடுத்து நிறுத்தினர். மேலும் டெல்லி காவல்துறையினர், சாலைகளில் தடுப்புகள் மற்றும் முள் கம்பிகள் போட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.