ட்ரெண்டாகும் கீர்த்தி சுரேஷின் அரபிக் குத்து ரீல்ஸ் வீடியோ இதோ!
By Anand S | Galatta | March 06, 2022 18:57 PM IST
தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக விளங்கும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து ரிலீசாக உள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தை கோலமாவு கோகிலா & டாக்டர் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்த பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், சதீஷ் கிருஷ்ணன், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் R.நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ள பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
பீஸ்ட் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் பீஸ்ட் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. முன்னதாக பீஸ்ட் படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதி வெளிவந்த அரபிக் குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று ட்ரெண்டாகி உள்ளது.
தளபதி விஜயின் ஸ்டைலான நடனத்தில் வெளிவந்த அரபிக் குத்து பாடல் YouTube-ல் 135 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் வைரலாகி வரும் அரபிக் குத்து பாடலுக்கு முன்னணி திரை நட்சத்திரங்கள் பலரும் நடனமாடி தங்களது வீடியோக்களை பதிவிட்டு உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடும் புதிய ரீல்ஸ் வீடியோ தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…