சின்னத்திரையில் ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 24 மணி நேரமும் காணும் வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை நடைபெற்ற 5 பிக் பாஸ் சீசன்களிலிருந்து 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வந்த நிலையில் சமீபத்தில் தனது விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் மீண்டும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் இடத்தை நிரப்பும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு புதிய தொகுப்பாளராக முன்னணி நடிகர் சிலம்பரசன் அதிரடியாக என்ட்ரி கொடுத்தார். கடந்த சில தினங்களுக்கு முன் சிலம்பரசனின் வருகைக்கு முன்பாக முக்கிய போட்டியாளரான வனிதா மிகுந்த மன உளைச்சல் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்து திடீரென வெளியேறினார்.

இதனிடையே இந்த வார பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோட் இன்று (மார்ச் 6ஆம் தேதி) ஒளிபரப்பாகிறது. பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளர்கள் அனைவரையும் சிலம்பரசன் வெளுத்து வாங்கும் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அனல் பறக்கும் அந்த ப்ரோமோ…