தமிழ் திரையுலகில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக விளங்கும் அரவிந்த் சுவாமி கடந்த ஆண்டு புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படமாக நடிகை கங்கனா ரணாவத் நடித்து வெளிவந்த தலைவி திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் தயாரிப்பில் வெளிவந்த நவரசா வெப்சீரிஸில் ரௌத்திரம் எனும் எபிசோடை இயக்கி இயக்குனராகவும் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து அரவிந்த் சுவாமியின் நடிப்பில் நரகாசுரன், சதுரங்க வேட்டை 2, கள்ளபார்ட் மற்றும் வணங்காமுடி ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன.

இதனிடையே நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள், ஆகஸ்ட் சினிமா மற்றும் சினிஹாலிக்ஸ் இணைந்து தயாரித்துள்ள ரெண்டகம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அரவிந்த் சுவாமி. இயக்குனர் ஃபெல்லினி இயக்கத்தில் கௌதம் ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ள ரெண்டகம் படத்திற்கு A.H.கசீஃப் இசையமைத்துள்ளார்.

வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அரவிந்த் சுவாமியின் ரெண்டகம் படத்தில் குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராப், ஈஷா ரெபா, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் ரெண்டகம் படத்தின் மிரட்டலான டீசர் தற்போது வெளியானது அந்த டீசர் இதோ…