நாசாவின் அட்லஸ் விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட, பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி கடந்தாண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஏழு மாத பயணத்திற்குப் பிறகு கடந்த 18ம் தேதி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை அடைந்து, செவ்வாய் கோளில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள், நீர் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகிறது.


இந்த ஆய்வூர்தி தரையிறங்கிய வேகத்தில் செவ்வாய் கிரகத்தின் பரப்பில் புழுதி பறந்து பதிவான காட்சிகளில், அங்குள்ள பாறைகளின் அமைப்பு தெளிவாக பதிவாகியுள்ளது. 19 பிரத்யேக கேமராக்கள், பலவிதமான புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. இந்நிலையில் உலக வரலாற்றில் முதன்முறையாக செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் ஒலியை இந்த ஆய்வூர்தி பதிவு செய்துள்ளது. 

mars
செவ்வாய் கிரகத்தில் காற்றோட்டத்தின் காரணமாக ஏற்படும் ஒலியை, பதிவுசெய்து இந்த ஆய்வூர்தி அனுப்பியுள்ளது. உலக வரலாற்று சாதனையை நாசா செய்துள்ளது. மேலும் 2030ம் ஆண்டு மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.