மக்கள் அன்றாடம் பார்த்து மகிழும் தமிழ் சேனல்களில் ஒன்று ஜீ தமிழ்.குறுகிய காலத்தில் மக்கள் மனதில் தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,வித்தியாசமான கதைக்களம் கொண்ட சீரியல்கள் என்று மக்கள் மனதில் சிம்மாசனம் அமைத்து அமர்ந்து விட்டது ஜீ தமிழ்.இந்த சேனலின் முக்கிய தொடர்களில் ஒன்று யாரடி நீ மோகினி.

ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களின் நெஞ்சங்களில் பல வருடங்களாக அசைக்கமுடியாத இடத்தை பிடித்துள்ள ஒரு தொடர் யாரடி நீ மோகினி.முதலில் சஞ்சீவ் இந்த தொடரில் நாயகனாக நடித்து வந்தார்.பின்னர் சில காரணங்களால் இவர் இந்த தொடரில் இருந்து விலக அவருக்கு பதிலாக ஸ்ரீகுமார் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.

நக்ஷத்திரா இந்த தொடரின் நாயகியாகவும்,யமுனா சின்னதுரை இந்த தொடரில் மோகினியாகவும் அசத்தி வருகின்றனர்.சைத்ரா ரெட்டி இந்த தொடரில் வில்லியாக நடித்து பேராதரவை பெற்று வருகிறார்.பாத்திமா பாபு இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.இவர்களை தவிர இன்னும் பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று வருகிறது.இந்த தொடருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த தொடரின் முக்கிய வில்லியான சைத்ரா ரெட்டிக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது.இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.பல மைல்கல்களை கடந்து வந்துள்ள இந்த தொடர் தற்போது மற்றுமொரு சாதனையைநிகழ்த்தியுள்ளது, இன்றுடன் 1000 எபிசோடுகளை இந்த தொடர் கடந்து அசத்துகிறது.இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.