இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா நடிகர் சிலம்பரசன் இணைந்தால் எப்போதும் வெற்றி தான். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.அந்தவகையில் மீண்டும் ஒரு புதிய ஆல்பம் பாடலுக்காக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும் சிலம்பரசனும் இணைந்திருக்கிறார்கள். 

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய ஆல்பம் பாடலை நடிகர் சிலம்பரசன் பாடுகிறார். இந்த ஆல்பம் பாடலின் மூலம் யுவன்ஷங்கர் ராஜா புதிய சுயாதீன இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறார்.அறிமுக இசையமைப்பாளர்  A.K.ப்ரியன் இசையமைக்கும் புதிய பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத நடிகர் சிலம்பரசன் பாடவுள்ளார். 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் அபி & அபி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் நந்தினி R அபினேஷ் மற்றும் Noise & Grains இணைந்து தயாரிக்கின்றனர்.இயக்குனர் டாங்லி ஜம்போ இயக்கும் இப்பாடலுக்கு மேயாத மான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான விது அய்யனா ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்கம் செய்கிறார்.  இந்த புதிய ஆல்பம் பாடலின் டைட்டிலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தப்பு பண்ணிட்டேன் என இந்த பாடலுக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பாடலின் மற்ற அறிவிப்புகளும் பாடலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.