தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக 25 ஆண்டுகளை நிறைவு செய்து தனக்கென தனி இசை சாம்ராஜ்ஜியத்தில் ரசிகர்களை இடைவிடாது மகிழ்வித்து வருபவர் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. கடைசியாக அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படத்திலும் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் விசில் தீம் மியூசிக் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து இந்த (2022) ஆண்டு யுவனின் இசையில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. அந்தவகையில் விஜய் சேதுபதியின் மாமனிதன், இயக்குனர் செல்வராகவன்-தனுஷின் நானே வருவேன், இயக்குனர் ராம்-நிவின்பாலியின் புதிய திரைப்படம், இயக்குனர் அமீரின் இறைவன் மிகப் பெரியவன், நடிகர் கார்த்தியின் விருமன், கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் அதர்வாவின் குருதி ஆட்டம் மற்றும் சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

இதனிடையே யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள புதிய CANDY மியூசிக் வீடியோ தற்போது வெளியானது. யுவன் ஷங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில் வினோத் பானுஷலி வழங்கும் இந்த CANDY பாடலில்  யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பிரபல பாடகி  த்வானி பானுஷலி இணைந்து பாடி நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடலை தெருக்குரல் அறிவு எழுதியுள்ளார். அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ள CANDY பாடலுக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் யுவன் ஷங்கர் ராஜாவின் துள்ளலான இசையில் வெளிவந்துள்ள இந்த CANDY மியூசிக் வீடியோ தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கலக்கலான CANDY மியூசிக் வீடியோ இதோ…