தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித்குமார் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழ்கிறார். சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித்குமார் காவல்துறை அதிகாரியாக நடித்து வெளிவந்த வலிமை திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளை திருவிழாக்களாக மாற்றி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவான வலிமை திரைப்படத்தை சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று & மேற்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய H.வினோத் இயக்கினார். அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் வலிமை படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயன் பணியாற்றினார். யுவன் ஷங்கர் ராஜா பாடல்களுக்கு இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசை சேர்த்தார்.

இதனைத் தொடர்ந்து அஜீத் குமாரின் அடுத்த படமாக தயாராக இருக்கும் #AK61 திரைப்படத்தையும் போனி கபூர் தயாரிப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இந்தத் திரைப்படத்தையும் இயக்குனர் H.வினோத் இயக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித்குமாரின் புதிய கெட்டப் வெளியானது. இந்த லுக் அடுத்த #AK61 கெட்டப்பாகவும் இருக்கலாம். நடிகர் அஜித் குமார் அவரது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளோடு இருக்கும் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளன. கிளாஸ்ஸான புது லுக்கில் அஜித்குமார் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன. அட்டகாசமான அந்த புகைப்படங்கள் இதோ…