பேரரசை எதிர்த்த சிறுகுடி.. கவனத்தை ஈர்த்த பிரம்மாண்ட ‘யாத்திசை.. ஒடிடி ரிலீஸ் எப்போது..? – உற்சாகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..

யாத்திசை ஒடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு வைரல் பதிவு இதோ - Yaathisai OTT release Date announced | Galatta

தமிழ் சினிமாவில் வரலாற்று புனைவு சார்ந்த திரைப்படங்கள் காலம் காலமாக தமிழ் சினிமாவில் வந்தவண்ணம் இருக்கின்றது.. அதில் சில படங்கள் தான் மக்களை ஆச்சர்ய படுத்தவும் அந்த காலக் கட்டத்திற்கே கொண்டு செல்லும் உணர்வையும் கொடுக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘யாத்திசை’. பாண்டிய அரசையும் எயினர் மக்கள் வாழ்வியலையும் படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் தரணி ராசேந்திரன். குறைந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவான யாத்திசை படத்தின் டிரைலர் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றது. படத்தில் சங்க கால தமிழ் ஆய்வு செய்து தனித்துவமாக பயன்படுத்தி படத்தின் சுவாரஸ்யத்தை அதிகம் உயர்த்தியுள்ளனர். இதனாலே இந்த படத்திற்கு பரவாலான கவனம்  தமிழ் திரையுலகில் இருந்து வந்தது.

கே.ஜே கணேஷ் தயாரிப்பில் உருவான யாத்திசை படத்திற்கு ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்ய மகேந்திரன் பிரசாத் படதொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் குரு சோமசுந்தரம், சுபத்ரா, சக்தி மித்திரன், சேயோன், ராஜலக்ஷ்மி, சமர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரம்மிப்பையும் எதிர்பார்பையும் உயர்த்திய யாத்திசை திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 21 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாள் கிடைத்த நேர்மறையான விமர்சனத்தை யடுத்து அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சேர்ந்தனர். காட்சிக்கு காட்சி பிரம்மிப்பை வழங்கிய யாத்திசை திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் திரைபிரபலங்கள் ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளை படக்குழு பெற்றது.

ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடிய யாத்திசை  திரைப்படம் வரும் மே 12 ம் தேதி பிரபல ஒடிடி தளமான அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. இது தொடர்பாக  படத்தின் இயக்குனர் தரணி ராசேந்திரன் அவரது முகநூல் பக்கத்தில்,

“மகிழ்ச்சி பகிரல். மே12 May12 முதல் யாத்திசை Amazon prime ல் வருகிறது.. இன்னும் யாத்திசை திரையரங்கிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது... பேரரசை எதிர்த்த சிறு குடி. கடந்த மூன்று வாரங்களாக 20திற்கும் மேலான வணிக படத்தை எதிர்த்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது யாத்திசைஎன்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் அவரது பதிவின் கீழ் நெகிழ்ச்சியுடன் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.  

பைக் பயணத்தை முடித்து மாஸ் காட்டிய அஜித் குமார்.. தொடங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு – ரசிகர்கள் கொண்டாடும் அறிவிப்பு இதோ..
சினிமா

பைக் பயணத்தை முடித்து மாஸ் காட்டிய அஜித் குமார்.. தொடங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு – ரசிகர்கள் கொண்டாடும் அறிவிப்பு இதோ..

மூன்று மொழியில் டப்பிங்.. ஒரே நேரத்தில் அசால்டாக முடித்து காட்டிய விஷால்.. – 'மார்க் ஆண்டனி' படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ..
சினிமா

மூன்று மொழியில் டப்பிங்.. ஒரே நேரத்தில் அசால்டாக முடித்து காட்டிய விஷால்.. – 'மார்க் ஆண்டனி' படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ..

மெர்சலான லுக்கில் ஷாருக் கான்..! அட்லீ இயக்கும் ‘ஜவான்’ ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு -  வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

மெர்சலான லுக்கில் ஷாருக் கான்..! அட்லீ இயக்கும் ‘ஜவான்’ ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு - வைரலாகும் Glimpse இதோ..