பைக் பயணத்தை முடித்து மாஸ் காட்டிய அஜித் குமார்.. தொடங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு – ரசிகர்கள் கொண்டாடும் அறிவிப்பு இதோ..

நேபாளம் பைக் பயணத்தை முடித்த அஜித் குமார் வைரல் பதிவு இதோ - Ajith kumar complete Nepal bike tour here is the details | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் பாக்ஸ் ஆபீஸ் சாம்ராட்டாகவும் இருந்து வருபவர் நடிகர் அஜித். இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி படமான ‘துணிவு’ படத்துடன் இந்த ஆண்டினை தொடங்கிய அஜித். தற்போது லைகா தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கவுள்ளார். இப்படம் குறித்த அப்டேட் அஜித் அவரது பிறந்த நாள் அன்று வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.  படத்திற்கான முன் வேலை தீவிரமாக நடந்து கொண்டிருக்க விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இதனிடையே அஜித் குமார் அவர்கள் திரைத்துறையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் தனக்கென தனி வாழ்வை கடமையுடன் அஜித் குமார் கடைபிடித்து வருகிறார். திரைத்துறையில் மட்டுமல்லாமல் அஜித் குமாரை அவரது நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு ஊக்கமாக இருந்து வருகிறார். அதன்படி அஜித் குமாரின் வாழ்நாள் ஆசையான உலகம் முழுவதும் பைக்கில் பயணம் மேற்கொள்வதை கடந்த ஆண்டு முதல் செய்து வருகிறார். அதன் முதல் படியாக இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த பரஸ்பர மரியாதைக்கான பயணத்திற்காக அஜித் குமார் பல ஆலோசனைகள பெற்று அந்த பயணத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்தியா முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு முடித்த அஜித் குமார்.

பின் சில மாதம் ஓய்வுக்கு பின் கடந்த சில மாதங்களுக்கு முன் நேபால் மற்றும் பூட்டான் பகுதிகளில் பயணம் மேற்கொண்டார். அதன்படி திட்டமிட்டபடி நேபால் மற்றும் பூட்டான் பகுதிகள் முழுவதும் பயணத்தை முடித்துள்ளார் நடிகர் அஜித்குமார். இது தொடர்பாக அஜித் குமாரின் மேனேஜர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

#AjithKumarWorldTour#AKWorldRideformutualrespect pic.twitter.com/a3HVJxQAQD

— Suresh Chandra (@SureshChandraa) May 9, 2023

அதில் சவாலான நிலபரப்புகளிலும் கடுமையான வானிலை நிலைகளையும் எதிர்கொண்டு அஜித் அவர்கள் இந்தியா மாநிலங்கள் மற்றும் நேபாளம் மற்றும் பூட்டான் பகுதிகளில் பைக் பயணம் மேற்கொண்டு முடித்துள்ளார். அவரது அடுத்த உலகம் சுற்றும் பயணத்தின் பகுதி வரும் நவம்பர் மாதம் தொடங்கும்” என்று பதிவிட்டுள்ளார்.  முன்னதாக உலக பயணம் மேற்கொண்டு பாதியிலே முடித்து துணிவு படத்தில் நடித்து முடித்து கொடுத்தார்.

Havind ridden across Challenging Terrains and facing extreme weather conditions. Ajith has ridden across every Indian state n has covered Nepal n Bhutan aswell.
Next leg of world tour to begin in Nov 2023#AjithKumarWorldTour#AKWorldRideformutualrespect pic.twitter.com/aeSuBYDGp9

— Suresh Chandra (@SureshChandraa) May 9, 2023

அதன்படி தற்போது உலகபயணத்தின் ஒருபகுதியை முடித்துள்ளார். எனவே விரைவில் அஜித் குமாரப் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இதையடுத்து ரசிகர்கள் அஜித் குமார் அவரது உலகபயணத்திற்காக வாழ்த்தி கொண்டாடி வருகின்றனர்.

‘பத்து தல’ பட இயக்குனரின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம்.. அட்டகாசமான அறிவிப்பை பகிர்ந்த ஏ ஆர் ரஹ்மான்.. – வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

‘பத்து தல’ பட இயக்குனரின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம்.. அட்டகாசமான அறிவிப்பை பகிர்ந்த ஏ ஆர் ரஹ்மான்.. – வைரலாகும் அறிவிப்பு இதோ..

பொன்னியின் செல்வன், ஜப்பான் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படம்.. – தயாரிப்பாளர் கொடுத்த அட்டகாசமான அப்டேட்.. Exclusive interview இதோ..
சினிமா

பொன்னியின் செல்வன், ஜப்பான் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படம்.. – தயாரிப்பாளர் கொடுத்த அட்டகாசமான அப்டேட்.. Exclusive interview இதோ..

Cult classic திரைப்படமாக உருவாகும் விடாமுயற்சி..! பிரபல தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்.. – Exclusive Interview இதோ..
சினிமா

Cult classic திரைப்படமாக உருவாகும் விடாமுயற்சி..! பிரபல தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்.. – Exclusive Interview இதோ..