தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் தல அஜித். நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். ஆளில்லா ட்ரோன் விமானங்களை இயக்குவதிலும் அஜித்திற்கு ஆர்வம் அதிகம். அதனால் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் ஆலோசகராகவும் பதவி வகித்தார்.

இவரது நடிப்பில் கடந்த 2019 பொங்கலுக்கு வெளியாகி பட்டையை கிளப்பிய படம் விஸ்வாசம்.வீரம்,வேதாளம்,விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் இணைந்தார் சிவா.சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரித்திருந்தனர்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.அனிகா,யோகி பாபு,விவேக்,கோவை சரளா,ரோபோ ஷங்கர்,தம்பி ராமையா,ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.அப்பா மகள் செண்டிமெண்ட்,குடும்ப உறவுகளின் ஒற்றுமை என்று பக்கா கமர்ஷியல் படமாக உருவான இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

இமான் இசையில் படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.சமீபத்தில் இந்த படத்தின் பாடல்களுக்கு தேசிய விருது கிடைத்தது.இந்த படத்தின் ரொமான்டிக் பாடலான வானே வானே என்ற பாடல் வீடியோ தற்போது 75 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.