“நயன்தாராவிடம் உஷாராக இருங்கள்..!” விக்னேஷ் சிவனுக்கு கியூட் அட்வைஸ் வழங்கிய ‘ஜவான்’ ஷாருக் கான்..

நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவனிடம் பகிர்ந்த ஷாருக் கான் வைரல் பதிவு உள்ளே - Shah rukh khan about nayanthara in jawan movie | Galatta

இந்திய திரையுலக நட்சத்திரங்களில் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று கிங் கானாக இந்திய சினிமாவில் வலம் வருபவர் நடிகர் ஷாருக் கான். வியாபார ரீதியாக வீழ்ச்சியை சந்தித்து வந்த பாலிவுட் திரையுலகை தனது பதான் திரைப்படம் மூலம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து மீண்டும் பாலிவுட்டின் கிங் கானாக நிருபித்திருக்கும் ஷாருக் கான் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘ஜவான்’. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லி முதல் முறையாக இந்தியில் இயக்கும் இப்படத்தில் ஷாருக் கான் அட்டகாசமான ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க படத்தில் கதாநாயாகியாக தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கின்றார். இவர்களுடன் பிரியா மணி, சானியா மல்ஹோத்ரா, யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.  சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி இந்திய ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வைரலானது. வெளியான சிறப்பு முன்னோட்டத்தை திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் ஆதரவை பகிர்ந்து இணையத்தை அதகளப் படுத்தினர்.

அதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்ரெய்லரை பாராட்டி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். இதையடுத்து விக்னேஷ் சிவனின் பதிவை ஷாருக் கான் பகிர்ந்து அதனுடன்

“ உங்களின் அன்பிற்கு நன்றி.. நயன்தாரா அருமையானவர், இது  அனைவருக்கும் தெரியும் உங்களுக்கும் கூட. ஆனால் ஒரு கணவராக நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர் இப்போது புது விதமான ஸ்டன்ட்களையும் கிக்களையும் கற்றுக் கொண்டுள்ளார்.” என்று நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ஷாருக் கான் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

@VigneshShivN thank u for all the love. #Nayanthara is awesome…but oh who am I telling this…you toh already know!!! But Hubby, beware, she has now learnt some major kicks & punches!! pic.twitter.com/5aMZ8rzReN

— Shah Rukh Khan (@iamsrk) July 12, 2023

இதையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் ஷாருக் பதிவை பகிர்ந்து, “நீங்கள் அருமையானவர் சார். நான் ஜாக்கிரதையாக இருந்து கொள்கிறேன்.. ஆனால் நான் மற்றொன்றையும் கேள்வி பட்டேன்.. படத்தில் அருமையான காதல் காட்சிகள் உங்களுக்கும் அவருக்கும் இருப்பதாக.. அதன்படி நயன்தாரா அவர்களும் கிங் ஆப் ரொமான்ஸ் உங்களிடம் அதனை கற்றுக் கொண்டுள்ளார். உங்களுடன் அவர் அறிமுகமான மகிழ்ச்சியை ரசித்து வருகிறேன். மேலும் ஜவான் திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என்பது உறுதி.” என்று அவரது அன்பை பகிர்ந்துள்ளார். இதையடுத்து இணையத்தில் ரசிகர்களால் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவும் வைரலாகி வருகிறது.

 

😆 soooo kind of you sir 😇😇❤️
Yes sir being very careful 🫡 but I also heard there is some good romance between the both of you in the movie , that she has learnt from the king of romance 🥰 , so already cherishing that with the happiness of such a dream Debut with YOU #SRKhttps://t.co/hqOSBI3YUF

— VigneshShivan (@VigneshShivN) July 12, 2023

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய திரைப்படமாக உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

அழகான புகைப்படங்களுடன் செல்ல மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்.! – வாழ்த்துகளுடன் வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

அழகான புகைப்படங்களுடன் செல்ல மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்.! – வாழ்த்துகளுடன் வைரலாகும் பதிவு உள்ளே..

விதிகளை பின்பற்றாமல் சிக்னலை மீறிய விஜயின் கார்.. அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்.!
சினிமா

விதிகளை பின்பற்றாமல் சிக்னலை மீறிய விஜயின் கார்.. அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்.!

“திரைப்படங்கள் இனி 8 வாரங்களுக்கு பின்பு தான் ஒடிடியில் வெளியிட வேண்டும்.” திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம்.. விவரம் உள்ளே..
சினிமா

“திரைப்படங்கள் இனி 8 வாரங்களுக்கு பின்பு தான் ஒடிடியில் வெளியிட வேண்டும்.” திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம்.. விவரம் உள்ளே..