தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டில் (2022) வெளிவந்த FIR திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் சைக்கோ த்ரில்லர் படமாக தயாராகியுள்ள திரைப்படம் மோகன்தாஸ்.

விஷ்ணு விஷால் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன்தாஸ் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் கட்டா குஸ்தி (தெலுங்கில் மட்டி குஸ்தி). 

வெண்ணிலா கபடி குழு, ஜீவா என விஷ்ணு விஷால் நடிப்பில் விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படங்களின் வரிசையில் பாரம்பரியமான கட்டா குஸ்தி சண்டையை மையப்படுத்தி தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் RT டீம் வொர்க்ஸ் மற்றும் விஷ்ணு விஷாலின் விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, கட்டா குஸ்தி திரைப்படம் தயாராகி வருகிறது.

விஷ்ணு விஷாலுடன் இணைந்து  ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க,  முனீஸ்காந்த் ,லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்நிலையில் கட்டா குஸ்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அசத்தலான அந்த போஸ்டர் இதோ…
 

Here is the first look of #GattaKusthi. Always a pleasure to see @TheVishnuVishal in sports films. Wish you another grand success with this film Vishnu. pic.twitter.com/9EGvoQOf5v

— Dhanush (@dhanushkraja) November 2, 2022