தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை அடுத்து பிரசவத்திற்கு பின் மீண்டும் நடிகையாக தனது தொலை பயணத்தை தொடங்கியுள்ள காஜல் அகர்வால் நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான புகைப்படங்கள் தயாராகி வருகின்றன.

அந்த வகையில் பாலிவுட்டில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் உமா மற்றும் தமிழில் கருங்காப்பியம் ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. முன்னதாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறார். 

இதனிடையே குலேபகாவலி & ஜாக்பாட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் கோஸ்டி. SEED PICTURES நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கோஸ்டி திரைப்படத்திற்கு ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவில் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

ஹாரர் காமெடி திரைப்படமாக ரசிகர்களை மகிழ்விக்க வரும் கோஸ்டி திரைப்படத்தில் காஜல் அகர்வாலும் இணைந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, ஊர்வசி, , ஆடுகளம் நரேன், சத்தியன், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, சந்தான பாரதி, லிவின்ஸ்டன், மதன் பாபு, மனோபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, முக்கியமான கௌரவ தோற்றத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். 

சமீபத்தில் வெளியான கோஸ்டி திரைப்படத்தின் கலகலப்பான டீசர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோஸ்டி திரைப்படத்திலிருந்து பிரம்மன் எனும் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால், யோகி பாபு, ஜெகன் மற்றும் ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் இணைந்து கலக்கியுள்ள பிரம்மன் வீடியோ பாடல் இதோ…