வேகமெடுக்கும் விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி பட இறுதி கட்டப் பணிகள்... கலக்கலான புது வீடியோ இதோ!

வேகமெடுக்கும் விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி பட இறுதி கட்டப் பணிகள்,vishal sj suryah in mark antony movie final stages of dubbing video | Galatta

பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் ட்ரீட்டாக வர இருக்கும் விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி பட இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளனர். தனக்கென தனி பாணியில் தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லத்தி. காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்து வெளிவந்த லத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என தெரிகிறது. அடுத்ததாக தனது திரைப் பயணத்தில் 34வது படமாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். முன்னதாக விஷால் - ஹரி கூட்டணியில் வெளிவந்த தாமிரபரணி & பூஜை ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்த வெற்றி படமாக ஹட்ரிக் ஹிட் கொடுக்கும் வகையில் மீண்டும் இந்த கூட்டணி இணைந்து இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து வித்தியாசமான கட்டணம் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பொம்மை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அதிரடி திரைப்படமாக தயாராகி இருக்கும் டபுள் எக்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரண் கதாநாயகனாக நடித்துவரும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே.சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் நடிகர்கள் விஷால் மற்றும் SJசூர்யா இணைந்து மிரட்டலான முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரித்துள்ள சுவாரசியமான டைம் டிராவல் கான்செப்ட்டை கொண்டு 1960 காலகட்டத்தை கதைக்களமாக கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெளியீடாக ரிலீஸாக இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இறுதி கட்ட டப்பிங் பணிகளில் நடிகர் விஷால் ஈடுபட்டிருக்கும் வீடியோ ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…
 

உதயநிதி ஸ்டாலினின் திரைப்பயணத்தில் உச்சம் தொட்ட மாமன்னன்... மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியீடு! வைரல் வீடியோ இதோ
சினிமா

உதயநிதி ஸ்டாலினின் திரைப்பயணத்தில் உச்சம் தொட்ட மாமன்னன்... மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியீடு! வைரல் வீடியோ இதோ

ஷாரூக் கான் - அட்லீயின் ஆக்ஷன் ப்ளாக் ஜவான்... ரசிகர்கள் எதிர்பார்த்த அதிரடி அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!
சினிமா

ஷாரூக் கான் - அட்லீயின் ஆக்ஷன் ப்ளாக் ஜவான்... ரசிகர்கள் எதிர்பார்த்த அதிரடி அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!

2000கோடியை தாண்டுவது உறுதி!- KGF இயக்குனர் - பிரபாஸின் சலார் படம் பற்றி முக்கிய நடிகர் பகிர்ந்த மாஸ் தகவல்! வைரல் புகைப்படம் இதோ
சினிமா

2000கோடியை தாண்டுவது உறுதி!- KGF இயக்குனர் - பிரபாஸின் சலார் படம் பற்றி முக்கிய நடிகர் பகிர்ந்த மாஸ் தகவல்! வைரல் புகைப்படம் இதோ