உதயநிதி ஸ்டாலினின் திரைப்பயணத்தில் உச்சம் தொட்ட மாமன்னன்... மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியீடு! வைரல் வீடியோ இதோ

உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியீடு,udhayanidhi stanin in maamannan movie box office collection revealed | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருந்த மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று உதயநிதி ஸ்டாலின் அவர்களின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக பாக்ஸ் ஆபிஸில் வசூலித்துள்ளது. பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என இரண்டு திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த வெற்றி படமாக மாமன்னன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் வழங்கியிருக்கிறார்.  முதல்முறையாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் கதையின் நாயகனாக நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களோடு இணைந்து வாசல் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட காலமாக பேச நினைத்த சமூக நீதி அரசியலை மிக அழுத்தமாக பேசியிருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மற்றொரு வளமாக இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் மெருகேற்றி இருக்கிறார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, தேனி ஈஸ்வர் அவர்களின் ஒளிப்பதிவில் செல்வா.ஆர்.கே படத்தொகுப்பு செய்திருக்கும் மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பெரும் வெற்றிக்கு காரணமான இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மாமன்னன் பட குழுவினர் அன்பு பரிசாக மினி கூப்பர் கார் ஒன்றை பரிசளித்தனர். தொடர்ந்து வைகைப்புயல் வடிவேலு அவர்களை அவரது வீட்டில் நேரில் சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தமிழில் வெற்றி பெற்ற மாமன்னன் திரைப்படம் தற்போது தெலுங்கில் நாயகுடு என்ற பெயரில் வெளியாகிறது. தமிழில் வெற்றி பெற்றது போலவே தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏசியன் சினிமாஸ் மற்றும் சுரேஷ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிட வருகிற ஜூலை 14ஆம் தேதி மாமன்னன் தெலுங்கு வெர்ஷனான நாயகுடு ரிலீஸ் ஆகிறது.

தமிழ் சினிமாவில் இதுவரை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். எனவே முற்றிலுமாக சினிமாவை விட்டு விலகி மக்கள் பணியில் ஈடுபட முடிவு செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாமன்னன் திரைப்படத்தை தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கடைசி படமாக வெளிவந்திருக்கும் மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தற்போது மாமன்னன் திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது இந்த விழாவில் உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் ஆப்பிள் ஐ-பேட் பரிசாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது திரைப்பயணத்தில் அதிகபட்ச வசூலாக மாமன்னன் திரைப்படம் கடந்த 9 நாட்களில் 52 கோடி ரூபாய் வசூல் திறப்பதாக அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகள் என அனைத்திலும் சேர்ந்து மொத்தமாக இந்த 52 கோடி வசூலித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். மாமன்னன் வசூல் குறித்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Galatta Media (@galattadotcom)

மாவீரன் ப்ரொமோஷனில் கிரீன் இந்தியா சேலஞ்ச் செய்த சிவகார்த்திகேயன்... குவியும் பாராட்டுகள்! வைரலாகும் வீடியோ உள்ளே
சினிமா

மாவீரன் ப்ரொமோஷனில் கிரீன் இந்தியா சேலஞ்ச் செய்த சிவகார்த்திகேயன்... குவியும் பாராட்டுகள்! வைரலாகும் வீடியோ உள்ளே

ஷாரூக் கான் - அட்லீயின் பக்கா ஆக்ஷன் ஜவான் பட ட்ரெய்லர் ரெடி... சென்சார் மற்றும் ரன் டைம் குறித்த தகவல்கள் இதோ!
சினிமா

ஷாரூக் கான் - அட்லீயின் பக்கா ஆக்ஷன் ஜவான் பட ட்ரெய்லர் ரெடி... சென்சார் மற்றும் ரன் டைம் குறித்த தகவல்கள் இதோ!

அருண் விஜய் - எமி ஜாக்சனின் அனல் பறக்கும் ஆக்ஷனில் மிஷன் சாப்டர் 1... லைகா ப்ரோடக்ஷன்ஸின் அடுத்த படம்! அதிரடி வீடியோ இதோ
சினிமா

அருண் விஜய் - எமி ஜாக்சனின் அனல் பறக்கும் ஆக்ஷனில் மிஷன் சாப்டர் 1... லைகா ப்ரோடக்ஷன்ஸின் அடுத்த படம்! அதிரடி வீடியோ இதோ