மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் "மாமன்னன் கொண்டாட்டம்!"-  இதுவரை பார்த்து தான் அட்டகாசமான புது மேக்கிங் வீடியோ இதோ!

மாரி செல்வராஜ் மாமன்னன் பட புது மேக்கிங் வீடியோ வெளியீடு,mari selvaraj in maamannan movie new making video out now | Galatta

காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக தரமான படைப்பாக வெளிவந்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் இதுவரை வெளி வராத புதிய மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான தரமான சமூக நீதி படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் மாரி செல்வராஜ், தனது முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இருந்தே  தமிழ் சினிமாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினார். அழுத்தமான சமூக நீதியை மிகச்சிறப்பாக கையாண்டு வெற்றிக் கண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படமான கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்தார். கர்ணன் படம் ஏற்படுத்திய பெரிய பாதிப்பு சமூகத்திற்கான விவாதங்களை ஏற்படுத்தியது. பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் வெற்றிகளை தொடர்ந்து 3வது படமான மாமன்னன் திரைப்படத்தில் மாபெரும் வெற்றியை கைப்பற்றி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்
 
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் நடிகராகவும் திகழும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்சமயம் தமிழ் நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிப்பதால் மொத்தமாக சினிமாவில் இருந்து விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்து மாமன்னன் திரைப்படம் தான் தனது கடைசி படம் எனவும் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தது படத்தின் எதிர்பார்ப்புகளை கூட்ட, வைகைப்புயல் வடிவேலு அவர்கள் தனது திரைப்பயணத்திலேயே இதுவரை ஏற்று நடிக்காத முழுக்க முழுக்க அழுத்தமான முன்னணி கதாபாத்திரத்தில் மாமன்னன் எனும் கதையின் நாயகனாக நடித்திருப்பது இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை அதிகரித்தது. இவர்களுடன் மிரட்டலான வில்லனாக ஃபகத் ஃபாஸில், புரட்சிகரமான நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் களமிறங்கிய மாமன்னன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் கைக்கோர்த்தார். 

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க தேனி ஈஸ்வர் அவர்களின் ஒளிப்பதிவில், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு செய்திருக்கும் மாமன்னன் படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். வழக்கம்போல் அனைவரும் சமம் என்கிற முக்கிய சமூக நீதியை பேசும் வகையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளிவந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் இடையே ஏதோபித்த வரவேற்பை பெற்று தற்போது மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு காரணமான இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் மினி கூப்பர் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது வெற்றிக்கு மிக முக்கிய பலமாக அமைந்த வைகைப்புயல் வடிவேலு அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் படக்குழுவினர், அவருக்கு பெரிய மாலை ஒன்றை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த அட்டகாசமான நிகழ்வுகளின் தொகுப்பை ஒன்றிணைத்து புதிய மேக்கிங் வீடியோவாக படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். கலக்கலான அந்த புது மேக்கிங் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

உதயநிதி ஸ்டாலினின் திரைப்பயணத்தில் உச்சம் தொட்ட மாமன்னன்... மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியீடு! வைரல் வீடியோ இதோ
சினிமா

உதயநிதி ஸ்டாலினின் திரைப்பயணத்தில் உச்சம் தொட்ட மாமன்னன்... மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியீடு! வைரல் வீடியோ இதோ

ஷாரூக் கான் - அட்லீயின் ஆக்ஷன் ப்ளாக் ஜவான்... ரசிகர்கள் எதிர்பார்த்த அதிரடி அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!
சினிமா

ஷாரூக் கான் - அட்லீயின் ஆக்ஷன் ப்ளாக் ஜவான்... ரசிகர்கள் எதிர்பார்த்த அதிரடி அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!

2000கோடியை தாண்டுவது உறுதி!- KGF இயக்குனர் - பிரபாஸின் சலார் படம் பற்றி முக்கிய நடிகர் பகிர்ந்த மாஸ் தகவல்! வைரல் புகைப்படம் இதோ
சினிமா

2000கோடியை தாண்டுவது உறுதி!- KGF இயக்குனர் - பிரபாஸின் சலார் படம் பற்றி முக்கிய நடிகர் பகிர்ந்த மாஸ் தகவல்! வைரல் புகைப்படம் இதோ