2000கோடியை தாண்டுவது உறுதி!- KGF இயக்குனர் - பிரபாஸின் சலார் படம் பற்றி முக்கிய நடிகர் பகிர்ந்த மாஸ் தகவல்! வைரல் புகைப்படம் இதோ

பிரபாஸின் அதிரடியான சலார் படம் பற்றி முக்கிய நடிகர் பகிர்ந்த தகவல்,actor sapthagiri completed his dubbing for prabhas in salaar movie | Galatta

இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றான நடிகர் பிரபாஸின் சலாம் திரைப்படம் 2000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்வது உறுதி என பிரபல நடிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் பிரபாஸ் நடித்த ஆதிபுரூஷ் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் ரிலீசானது. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் என அடுத்தடுத்து வந்த திரைப்படங்கள் பிரபாஸின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தன. அந்த வகையில் ஆதிபுரூஷ் திரைப்படமாவது பெரும் வெற்றி பெறுமா என எதிர்பார்த்த நிலையில் வசூல் ரீதியில் வரவேற்பு இருந்தாலும் எதிர்பார்த்த அளவில் படம் இல்லாததால் இந்த படமும் ஏமாற்றத்தையே கொடுத்தது.  அடுத்ததாக இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான ப்ராஜெக்ட் கே படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எனவே இந்தத் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை தற்போது ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் ஒட்டுமொத்த பிரபாஸ் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் தான் சலார். கே ஜி எஃப் திரைப்படங்களின் மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள சலார் திரைப்படத்தில் மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்க, ஜெகபதிபாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ரெட்டி, சப்தகிரி ஆகியோர் சலார் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Hombale Films நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகி வரும் சலார் திரைப்படத்திற்கு புவன் கௌடா ஒளிப்பதிவில் உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவரும் சலார் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த 2023 ஆம் ஆண்டு வருட செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் சலார் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வெளிவந்த கே ஜி எஃப் சாப்டர் 1 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு அதன் இரண்டாவது பாகமாக வெளிவந்த கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படம் இமாலய வெற்றி பெற்று இந்திய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துவரும் இந்த சலார் திரைப்படமும் மிகப்பெரிய வசூல் சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சலார் திரைப்படத்தில் தன் பகுதி டப்பிங்கை நிறைவு செய்த நடிகர் சப்தகிரி, டப்பிங் ஸ்டுடியோவில் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு, "சலார் படத்திற்கான டப்பிங்கை இன்று நிறைவு செய்து இருக்கிறேன். இந்த படம் டபுள் ப்ளாக் மாஸ்டர் ஆகும். 2000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் வசூலாவது உறுதி என நான் நம்புகிறேன். நன்றி பேன் வேர்ல்ட் ஸ்டார் எங்கள் ரெபல் ஸ்டார் பிரபாஸ்  இயக்குனர் பிரசாந்த் நில்" என குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவு இதோ…
 

#SALAAR 🔥🔥🔥Today, I finished dubbing for my role in the highly anticipated film #Salaar. it's going to be a #doubleblockbuster. I'm confident that it will surpass the ₹2000cr mark at the box office. Thanks to #Panworld⭐️ Our #RebelStar #Prabhas #Garu & Director #Prashanthneelpic.twitter.com/l2TMTyHf6w

— Sapthagiri (@MeSapthagiri) July 8, 2023

அருண் விஜய் - எமி ஜாக்சனின் அனல் பறக்கும் ஆக்ஷனில் மிஷன் சாப்டர் 1... லைகா ப்ரோடக்ஷன்ஸின் அடுத்த படம்! அதிரடி வீடியோ இதோ
சினிமா

அருண் விஜய் - எமி ஜாக்சனின் அனல் பறக்கும் ஆக்ஷனில் மிஷன் சாப்டர் 1... லைகா ப்ரோடக்ஷன்ஸின் அடுத்த படம்! அதிரடி வீடியோ இதோ

அருள்நிதி - பிரியா பவானி சங்கரின் மிரட்டலான டிமான்டி காலனி 2 உருவான விதம்... மிரள வைக்கும் மேக்கிங் வீடியோ இதோ!
சினிமா

அருள்நிதி - பிரியா பவானி சங்கரின் மிரட்டலான டிமான்டி காலனி 2 உருவான விதம்... மிரள வைக்கும் மேக்கிங் வீடியோ இதோ!

'ரஜினி சார் போன்ல பேசினதும் குதிச்சிடே இருந்தேன்'- சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் பட காவாலா பாடல் பாடிய ஷில்பா ராவின் ஸ்பெஷல் பேட்டி இதோ!
சினிமா

'ரஜினி சார் போன்ல பேசினதும் குதிச்சிடே இருந்தேன்'- சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் பட காவாலா பாடல் பாடிய ஷில்பா ராவின் ஸ்பெஷல் பேட்டி இதோ!