ஷாரூக் கான் - அட்லீயின் ஆக்ஷன் ப்ளாக் ஜவான்... ரசிகர்கள் எதிர்பார்த்த அதிரடி அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!

ஷாரூக் கான் - அட்லீயின் ஜவான் பட PREVUE அறிவிப்பு,Shah rukh khan atlee in jawan movie prevue announcement video out now | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருந்த ஷாரூக் கான் - அட்லீ காம்போவின் ஐவான் படத்தின் PREVUE ரிலீஸ் அறிவிப்பு வெளியானது. பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஷாரூக் கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த பதான் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த பதான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஷாரூக் கான் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், PK உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகும் டங்கி திரைப்படத்தில் தற்போது ஷாரூக் கான் நடித்து வருகிறார். மேலும் சல்மான் கான் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் டைகர் 3 படத்தில் முக்கியமான கௌரவ வேடத்தில் ஷாரூக் கான் நடிக்க இருக்கிறார். இந்த வரிசையில் ஷாருக் கான் நடிப்பில் அடுத்த அதிரடி படமாக தயாராகி வரும் திரைப்படம் தான் ஜவான். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லீ முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாரூக் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக நயன்தாரா களமிறங்க, மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஜவான் படத்தில் தளபதி விஜய் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படத்திற்கு GK.விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர் அட்லி மற்றும் நயன்தாராவிற்கு மட்டுமல்லாது ஒளிப்பதிவாளர் விஷ்ணு, படத்தொகுப்பாளர் ரூபன் மற்றும் இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத்துக்கும் ஜவான் திரைப்படம் தான் முதல் ஹிந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என PAN INDIA படமாக ஜவான் படம் ரிலீஸாகவுள்ளது. 

ஜவான் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்து காத்திருந்த ஜமால் திரைப்படத்தின் டிரைலராக ஜவான் திரைப்படத்தின் PREVUE ஒன்றை படக் குழுவினர் வெளியிட உள்ளனர். நாளை ஜூலை 10ஆம் தேதி ஜமான் திரைப்படத்தின் அதிரடியான வீடியோவாக PREVUE ஒன்றை படக்குழு வெளியிடுகிறது. இதனை அறிவிக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இதோ…
 

1 day to go #JawanPrevue!🔥#Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/rOlDiuc0cX

— Red Chillies Entertainment (@RedChilliesEnt) July 9, 2023

ஷாரூக் கான் - அட்லீயின் பக்கா ஆக்ஷன் ஜவான் பட ட்ரெய்லர் ரெடி... சென்சார் மற்றும் ரன் டைம் குறித்த தகவல்கள் இதோ!
சினிமா

ஷாரூக் கான் - அட்லீயின் பக்கா ஆக்ஷன் ஜவான் பட ட்ரெய்லர் ரெடி... சென்சார் மற்றும் ரன் டைம் குறித்த தகவல்கள் இதோ!

அருண் விஜய் - எமி ஜாக்சனின் அனல் பறக்கும் ஆக்ஷனில் மிஷன் சாப்டர் 1... லைகா ப்ரோடக்ஷன்ஸின் அடுத்த படம்! அதிரடி வீடியோ இதோ
சினிமா

அருண் விஜய் - எமி ஜாக்சனின் அனல் பறக்கும் ஆக்ஷனில் மிஷன் சாப்டர் 1... லைகா ப்ரோடக்ஷன்ஸின் அடுத்த படம்! அதிரடி வீடியோ இதோ

அருள்நிதி - பிரியா பவானி சங்கரின் மிரட்டலான டிமான்டி காலனி 2 உருவான விதம்... மிரள வைக்கும் மேக்கிங் வீடியோ இதோ!
சினிமா

அருள்நிதி - பிரியா பவானி சங்கரின் மிரட்டலான டிமான்டி காலனி 2 உருவான விதம்... மிரள வைக்கும் மேக்கிங் வீடியோ இதோ!