SJசூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய விஷாலின் மார்க் ஆண்டனி படக்குழு... அட்டகாசமான புது GLIMPSE இதோ!

SJசூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய விஷாலின் மார்க் ஆண்டனி படக்குழு,vishal in mark antony movie crew celebrated sj suryah birthday | Galatta

விஷாலின் மார்க் ஆண்டனி படக்குழு SJ.சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும் தரமான நடிகராகவும் திகழும் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இன்று ஜூலை 20ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா அவர்களுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. தொடர்ந்து வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பொம்மை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அதிரடி திரைப்படமாக தயாராகி இருக்கும் டபுள் எக்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரண் கதாநாயகனாக நடித்துவரும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே.சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் நடிகர்கள் விஷால் மற்றும் SJசூர்யா இணைந்து மிரட்டலான முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரித்துள்ள சுவாரசியமான டைம் டிராவல் கான்செப்ட்டை கொண்டு 1960 காலகட்டத்தை கதைக்களமாக கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப்பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெளியீடாக ரிலீஸாக இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  இந்த நிலையில் தற்போது நடிகர் SJ.சூர்யாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மார்க் ஆண்டனி படத்தில் ஜாக்கி பாண்டியன் & மதன் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் அர்ப்பணிப்போடு நடித்த உங்களுக்கு நன்றி. உங்களது பிறந்த நாளிலும் டப்பிங் செய்து வருவதற்கு நன்றி…” எனக் குறிப்பிட்டு மார்க் ஆண்டனி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதேபோல் தயாரிப்பாளர் வினோத்குமார் அவர்கள் மார்க் ஆண்டனி திரைப்படத்திலிருந்து எஸ்.ஜே.சூர்யாவின் ஸ்டைலான ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அந்த பதிவுகள் இதோ…
 

Many more Happy returns of the day sir ⁦@iam_SJSuryah⁩ sir 💐🎉🎂 Waitijg to witness #JackiePandiyan’s atrocities ❤️ pic.twitter.com/VLpuIuVQOS

— Vinod Kumar (@vinod_offl) July 20, 2023

Happy birthday to our ‘Nadippu Arakkan’ @iam_SJSuryah sir thank you for ur amazing dedication towards #MarkAntony With Jackie Pandian & Madhan Pandian❤️.. Thank u for doing dubbing even on ur birthday sir🥳 ❤️💥❤️ @VishalKOfficial anna @vinod_offl sir ❤️💥 pic.twitter.com/2vm2O5hGYl

— Adhik Ravichandran (@Adhikravi) July 20, 2023

கைதி & மாஸ்டர் அர்ஜுன் தாஸ் - இயக்குனர் வசந்த பாலனின்
சினிமா

கைதி & மாஸ்டர் அர்ஜுன் தாஸ் - இயக்குனர் வசந்த பாலனின் "அநீதி"... ரசிகர்களை கவர்ந்த SNEAK PEEK வீடியோ இதோ!

'ஒவ்வொரு தழும்புக்கும் ஒரு கதை உண்டு… மன்னர் வருகிறார்!'- சூர்யாவின் கங்குவா பட மிரட்டலான முதல் GLIMPSE ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

'ஒவ்வொரு தழும்புக்கும் ஒரு கதை உண்டு… மன்னர் வருகிறார்!'- சூர்யாவின் கங்குவா பட மிரட்டலான முதல் GLIMPSE ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

சினிமா

"மாநகரம் லோகேஷிடம் இந்த LOKI சொல்லும் அட்வைஸ் என்ன?"- அசத்தலான பதிலளித்த லோகேஷ் கனகராஜ்! வைரல் வீடியோ