இயக்குனர் ஆனந்த் ஷங்கர், அரிமா நம்பி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். தொடர்ந்து சியான் விக்ரம் இரட்டைவேடங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்த அதிரடி ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த இருமுகன் திரைப்படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர்.

தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டாவின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரான நோட்டா (NOTA) திரைப்படத்தை இயக்கி இருந்தார். அடுத்ததாக தற்போது நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா நேருக்கு நேர் மோதும் ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக எனிமி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யாவுடன் இணைந்து மிர்னாலினி ரவி மம்தா மோகன்தாஸ் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் S.வினோத் குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் எனிமி திரைப்படத்திற்கு R.D.ராஜசேகர் ஒளிப்பதிவில் ரேமண்ட் டெர்ரிக் க்ரஸ்டா படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் தமன்.S இசையமைத்திருக்கிறார். 

இந்நிலையில் தற்போது எனிமி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் தமன் இசையில் நடிகர் விஷால் மற்றும் மிருணாளினி ரவியின் ரொமான்டிக்கான பத்தல பாடல் வெளியாகி உள்ளது. அழகான அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.