தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விக்ரம் பிரபு முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டு (2022) செப்டம்பர் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீஸாகவுள்ளது.

தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்திலும் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முன்னதாக விக்ரம் பிரபு நடித்துள்ள டாணாக்காரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 8-ம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறனின் அசுரன், சூர்யாவின் ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகரான தமிழ் இயக்கியுள்ள டாணாக்காரன் திரைப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள டாணாக்காரன் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

இதுவரை யாரும் பெரிதும் அறிந்திடாத காவல்துறை முக்கியமான பகுதியை கதைக்களமாக கொண்டு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள டாணாக்காரன் படத்தில் நடிகை அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்க லால், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் டாணாக்காரன் திரைப்படத்திலிருந்து துடித்தெழு தோழா பாடல் வெளியானது. அந்த பாடல் இதோ…