'எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்'- ஆஸ்கார் வென்ற VFX நிறுவனத்துடன் தளபதி 68 முதற்கட்ட பணியில் வெங்கட் பிரபு - விஜய்! ட்ரெண்டிங் புகைப்படம் இதோ

ஆஸ்கார் வென்ற VFX நிறுவனத்துடன் தளபதி 68 பணியில் வெங்கட் பிரபு - விஜய்,Vijay venkat prabhu Thalapathy68 crew joins with usc ict for vfx | Galatta

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி 68 திரைப்படத்தின் முதற்கட்ட பணிகளை தொடங்கி இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு, ஆஸ்கார் விருதுகள் வென்ற உலகின் முன்னணி VFX நிறுவனத்துடன் தளபதி 68 திரைப்படம் இணைந்திருப்பதை உறுதிப்படுத்தி, முதற்கட்ட பணியில் தளபதி விஜய் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் இந்த 2023 ஆம் ஆண்டில் தொடக்கத்திலேயே வாரிசு எனும் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் பக்கா ஃபேமிலி என்டர்டெயினர் படமாக வெற்றி பெற்ற வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து அதிரடி ஆக்சன் என்டர்டெயினர் படமாக லியோ படத்தில் விஜய் நடித்திருக்கிறார்.

மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் 100 சதவீதம் லோகேஷ் திரைப்படமாக தயாராகி இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து இருக்கின்றனர் தளபதி விஜய் உடன் இணைந்து பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆக்சன் கிங் அர்ஜுன் த்ரிஷா மன்சூர் அலிகான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனர் மிஷ்கின் என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் லியோ திரைப்படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த தளபதி விஜய் சிறு இடைவெளி எடுத்துக்கொண்டு தற்போது தனது 68வது திரைப்படமான தளபதி 68 திரைப்படத்தில் தற்போது கவனம் செலுத்தியிருக்கிறார். முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தை ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற பிகில் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்தபடியே தளபதி விஜயின் தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தளபதி விஜய் உடன் இணைந்து இந்த திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஜோதிகா கதாநாயகியாக இணைவதாகவும் நடிகை பிரியங்கா அருள் மோகன் மற்றொரு கதாநாயகியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இதுவரை இது குறித்த அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. 

இந்த நிலையில் தற்போது தளபதி 68 திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன/ அந்த வகையில் உலகின் முன்னணி VFX நிறுவனங்களில் ஒன்றாக ஆஸ்கார் விருதுகளை வென்ற USC ICT நிறுவனத்துடன் தளபதி 68 படக்குழு கைகோர்த்துள்ளது. லைட் ஸ்டேஜ் என்ற முறையில் மேம்பட்ட மோஷன் கேப்சர் செய்யக்கூடிய உயர்தர VFX பணிகளுக்காக தளபதி 68 படக்குழு தற்போது USC ICT நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த முதற்கட்ட பணியில் தளபதி விஜய் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தை தனது விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, "எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்!!! #தளபதி68" என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் அந்த புகைப்படங்கள் இதோ...
 

Welcome to the future!!! #Thalapathy68 @actorvijay @archanakalpathi pic.twitter.com/snWrqMEjfU

— venkat prabhu (@vp_offl) August 31, 2023