விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.

விஜய் டிவியின் பிரபல தொடர்களில் ஒன்று தேன்மொழி.விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியான ஜாக்குலின் இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.சித்தார்த் இந்த தொடரின் நாயகியாக அசத்தி வருகிறார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த தொடரின் ஷூட்டிங் லாக்டவுனை தொடர்ந்து சமீபத்தில் ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று வருகிறது.

இந்த தொடரின் புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இடையில் பிக்பாஸ் காரணமாக இந்த தொடர் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கப்பட்டது.இந்த தொடரின் நாயகியும்,விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியுமான ஜாக்குலின் தன் வாழ்க்கையில் அடுத்த அடியெடுத்து வைக்கப்போவதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.இதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர் கமிட் ஆகிவிட்டிர்களா என்று கேட்க அதற்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.இவர் என்ன அறிவிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.