விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.

விஜய் டிவியின் பிரபல தொடர்களில் ஒன்று தேன்மொழி.விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியான ஜாக்குலின் இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.சித்தார்த் இந்த தொடரின் நாயகியாக அசத்தி வருகிறார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தொடர் 300 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது இந்த தொடரில் ஜாக்குலினுக்கு அப்பாவாக நடித்து வந்த பிரபல சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார் என்ற சோகமான செய்தி கிடைத்துள்ளது.இவரது இழப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,அவரது குடும்பத்தினருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.