இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமலும் போதிய ஆக்சிஜன் வசதிகள் இல்லாமலும் மக்கள்  படும் அவஸ்தையை நம் கண்களால் பார்க்கக் கூட முடியவில்லை.முகக் கவசம்,சனிடைசர்,தனிமனித இடைவெளி,தனிமைப்படுத்துதல்,  ஊரடங்கு,பரிசோதனை ,மருத்துவ  பாதுகாப்பு வசதிகள் தற்போது தடுப்பூசி என நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் கொரோனா வைரஸ்-ஐ கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையில் பொது மக்களுக்கு நிவாரண பணிகள் செய்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி கொடுத்து உதவுமாறு முதல்வர் வேண்டுகோள் வைத்திருந்தார். இதனை அடுத்து பலரும் நிவாரணநிநி தந்து உதவுகிறார்கள். நடிகர் சூர்யா தன் குடும்பத்தினர் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி தங்கள் நிலையில் நடிகர் அஜித் குமார் தன் பங்கிற்கு 25 லட்சத்தை நிதி உதவியாக வழங்கியுள்ளார். 

இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவனுடன் இணைந்து அவர்களது மருந்து தயாரிக்கும் நிறுவனமான Apex Laboratories  சார்பாக  ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்தின் இந்த நிதி உதவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்

கொரோனா வைரஸ்-இன்  இரண்டாம் அலை முதல் அலையை விட இன்னும் தீவிரமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.  நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நோயினால் பலியானவர்கள் எண்ணிக்கையும் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே  இருக்கிறது .