தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.டாக்டர்,அயலான் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்துள்ளார்.இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.இந்த படங்களின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்தார் சிவகார்த்திகேயன்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.முதலில் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம் பின்னர் ரம்ஜானுக்கு தள்ளிப்போனது.தற்போது நிலவி வரும் கொரோனா சூழலில் மீண்டும் தள்ளிப்போயுள்ளது.

தற்போது இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்று தெரியவந்துள்ளது.இந்த படம் 2 மணி நேரம் 28 நிமிடங்கள் வரும் என்பதும் தெரியவந்துள்ளது.இந்த தகவல் சென்சார் போர்டின் வெப்சைட் மூலம் தெரியவந்துள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள்.சிவகார்த்திகேயன் படங்களில் யூ/ஏ சான்றிதழ் பெற்ற முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.