"2500 பெண்கள் 10000க்கும் மேற்பட்ட ரசிகர்கள்"- பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஸ்டார் விஜய் டிவியின் நவராத்திரி கொண்டாட்ட விழா!

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஸ்டார் விஜய் டிவியின் நவராத்திரி கொண்டாட்ட விழா,vijay tv navarathri kondattam went off in grand manner | Galatta

சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த தொலைக்காட்சி நிறுவனமாக, இந்திய சின்னத்திரை உலகின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமாக திகழும் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் புதுமையான முறையில் தற்போது நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்தி உள்ளது. கிட்டத்தட்ட ஏழு நகரங்களில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த நவராத்திரி கொண்டாட்ட விழாவில் எண்ணற்ற ரசிகர்கள் கலந்து கொண்டனர். நவராத்திரி என்றாலே கொண்டாட்டம் தான் அதிலும் விஜய் தொலைக்காட்சி நடத்திய இந்த நவராத்திரி கொண்டாட்டம் கொண்டாட்டங்களுக்கெல்லாம் கொண்டாட்டம் என சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளது. எண்ணற்ற ரசிகர்களோடு விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திரங்கள் இணைந்து கலக்கிய இந்த நவராத்திரி கொண்டாட்டம் சின்னத்திரை உலகின் மிகப்பெரிய நிகழ்வாக தற்போது ரசிகர்களின் மனதை ஈர்த்துள்ளது.

2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000 க்குமேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில்,  தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன், விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து, நவராத்திரி கொண்டாட்ட விழாவைக் கொண்டாடியுள்ளனர். சென்னையில் 16 அக்டோபர் 2023,  ஈரோட்டில் 17 அக்டோபர் 2023 , திருச்சியில் 18 அக்டோபர் 2023  திருநெல்வேலியில் 20 அக்டோபர் 2023 , தஞ்சாவூரில் 21 அக்டோபர் 2023 , மதுரையில் 22 அக்டோபர் 2023 ஆகிய தேதிகளில் இந்தக் கோலாகலமான நவராத்திரி கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நவராத்திரியின் ஸ்பெஷல் கொலு வைக்கும் போட்டியையும் விஜய் டிவி அறிவித்திருந்தது. அதன்படி அழகான பிரம்மாண்டமான கொலு வைத்த ரசிகர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் கலந்துகொள்ளத் திரு விளக்குப் பூஜை, சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் என பல்வேறு நிகழ்வுகள் மூலம் அசத்தியுள்ளது விஜய் டிவி.  மொத்தமாக ஏழு நகரங்களில் நடந்த இந்த விழாவினில் 2500 க்கும் மேற்பட்ட பெண்கள் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன், திரு விளக்கு பூஜை உட்பட  நிகழ்வுகளில் பங்கேற்றனர். தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது . ஒவ்வொரு ஊர்களில் மக்கள் திரள் திரளாகக் கூடி, நவராத்திரி விழாவினை விஜய் டிவி உடன் இணைந்து கொண்டாடினர். ஏறத்தாழ 10000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடி இவ்விழாவினை ரசித்துள்ளனர். 

நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து  கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடினர் இவர்களுடன் ஸ்டார் விஜய் முன்னணி பிரபலங்கள் பலரும் இவ்விழாவினில் பங்கேற்றனர். விஜய் தொலைக்காட்சி நவராத்திரி ஸ்பெஷலாக  நடந்து முடிந்த, நவராத்திரி கொண்டாட்டங்கள், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் அவர்கள் மனதில் என்றென்றும் மறக்க முடியாத மகிழ்வான நினைவுகளைத் தந்துள்ளது. எக்கச்சக்கமான கொண்டாட்டங்களோடு தற்போது விஜய் டிவியின் நவராத்திரி விழா நிறைவடைந்து இருக்கும் நிலையில் தொடர்ந்து இதே மாதிரியான பல்வேறு அட்டகாசமான விழாக்கள் ரசிகர்களுக்கு தொடர்ந்து விஜய் டிவி தரப்பட்டுள்ளது என்று விருந்தாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவியில் அட்டகாசமான நவராத்திரி கொண்டாட்ட விழா புகைப்படங்கள் இதோ...
chiyaan vikram pa ranjith in thangalaan movie release date announcement chiyaan vikram pa ranjith in thangalaan movie release date announcement