KH234 ஆரம்பம்!- உலக நாயகன் கமல்ஹாசன் - மணிரத்னத்தின் பிரம்மாண்ட படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்பு... துவக்க விழா வீடியோ இதோ!

கமல்ஹாசன் மணிரத்னத்தின் KH234 பட துவக்க விழா,kamal haasan mani ratnam in kh234 movie crew announced | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் மணிரத்னம் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியின் KH234 படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிவித்து படத்துவக்க விழா வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தனது திரைப்படங்களின் வாயிலாக ரசிகர்களின் ரசனையை மெருகேற்றிய மகா கலைஞன் உலக நாயகன் கமல்ஹாசன் அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து அடுத்ததாக தனது 233 வது திரைப்படமாக உருவாகும் KH233 திரைப்படத்தில் இயக்குனர் H.வினோத் உடன் கைகோர்க்கிறார் உலகநாயகன். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, மேற்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்த KH233 படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே உலக நாயகன் தொடங்கிய “தலைவன் இருக்கின்றான்” திரைப்படத்தின் தலைப்பை இப்படத்திற்கு வைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த வரிசையில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 234 வது திரைப்படமான KH234 திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக போற்றப்படும் “நாயகன்” திரைப்படத்திற்கு பின் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும் இயக்குனர் மணிரத்னம் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் KH234 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய போது, “மணிரத்னம் அவர்கள், KH234 திரைப்படத்தின் டீசருக்காக பணியாற்றி வருகிறார் வருகிற நவம்பர் 7ஆம் தேதி அந்த டீசர் வெளியாகும்” என தெரிவித்தார். உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி KH234 படத்தின் டீசர் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். 

இந்த நிலையில் KH234 திரைப்படத்தின் துவக்க விழா தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவில் KH234 திரைப்படத்தில் பணியாற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களை படக்குழு அறிவித்திருக்கிறது. ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் KH234 திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். கலை இயக்குனராக ஷர்மிஷ்டா ராய், ஆடை வடிவமைப்பாளர்களாக அமிர்தா ராம் மற்றும் ஏகா லக்கானி ஆகியோர் இணைந்துள்ளனர். மேலும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கும் KH234 திரைப்படத்தின் துவக்க விழா வீடியோ இதோ…