தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் வரலாற்று சாதனை படைத்த தளபதி விஜயின் லியோ... முதல் வார கலெக்ஷன் ரிப்போர்ட் இதோ!

தளபதி விஜயின் லியோ முதல் வாரத்தில் 461 கோடி வசூல்,thalapathy vijay in leo movie crossed 461 crores in 7 days box office | Galatta

தமிழ் சினிமாவின் வரலாற்று வசூல் சாதனையாக தளபதி விஜயின் லியோ படம் முதல் வாரத்திலேயே மிகப் பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை எட்டி இருக்கிறது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் வந்திருக்கும் இந்த லியோ திரைப்படம் இதுவரை இந்திய சினிமா ரசிகர்கள் பார்த்திராத விஷுவல் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த ஓராண்டுக்கு மேலாக தளபதி 67, தளபதி 67 எனத் தொடர்ந்து அப்டேட் கேட்க தொடங்கிய தளபதி விஜய் ரசிகர்கள் டைட்டில் அறிவிக்கப்பட்ட பிறகு லியோ அப்டேட் லியோ அப்டேட் என இடைவிடாது ஆர்வத்தை கொட்டி தீர்க்க கடந்த சில தினங்களுக்கு முன்பு லியோ திரைப்படம் ரிலீஸ் ஆனது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா - தளபதி விஜய் கூட்டணி லியோ திரைப்படத்தில் இணைந்து இருக்கிறது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார்.

எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக மிரட்டலான அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக, தளபதி விஜயின் லியோ திரைப்படம் உலகமெங்கும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. ஏற்கனவே பல்வேறு இடங்களில் பேசிய போது மாஸ்டர் படம் மாதிரி இந்த படம் 50% தளபதி படம் 50% லோகேஷ் படம் என்று இல்லாமல் முழுக்க முழுக்க 100% லோகேஷ் படம் என தெரிவித்தது போலவே இந்த லியோ திரைப்படம் வழக்கமான தளபதி விஜயின் விஷயங்களில் இருந்து விலகியே நகர்ந்து செல்கிறது. தளபதி விஜயின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் லியோ திரைப்படம் உலகம் முழுக்க மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன நிலையில் வசூலும் அதே அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக ஒவ்வொரு பகுதிகளிலும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 

அந்த வகையில் இந்திய இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த படமாக 148.75 கோடி ரூபாய் வசூல் செய்த லியோ திரைப்படத்தின் முதல் வார வசூல் நிலவரம் தற்போது வெளி வந்திருக்கிறது. வெளியான 7 நாட்களில் வினியோ திரைப்படம் 461 கோடிகளுக்கும் மேல் வசூல் இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றிலேயே முதல் வாரத்தில் அதிகபட்ச கலெக்ஷனாக லியோ திரைப்படம் தற்போது புதிய உச்சத்தை தொட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தளபதி விஜயின் லியோ பட முதல் வார வசூல் குறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
 

Pala rajakala pathachu ma 🔥
Nee orasama odidu 🤜🤛

461 CRORES+ - HIGHEST TOTAL GROSS COLLECTION IN THE HISTORY OF TAMIL CINEMA (7 DAYS) 😎

WORLDWIDE BOX OFFICE RAMPAGE 🫡#LeoIndustryHit #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjaypic.twitter.com/11uohwAfAR

— Seven Screen Studio (@7screenstudio) October 26, 2023