'சாதாரண படமாக இருக்காது!'- விஜய் & வெங்கட் பிரபுவின் தளபதி 68 படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசிய ஸ்பெஷல் பேட்டி இதோ!

விஜய்யின் தளபதி 68 படம் பற்றி பேசிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்,producer dhananjeyan about vijay venkat prabhu in thalapathy 68 movie | Galatta

லியோ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது தளபதி 68 திரைப்படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார் தளபதி விஜய். முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கும் தளபதி விஜயின் 68வது படமாக உருவாகும் இந்த தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 2ம் தேதி பூஜை உடன் தொடங்கப்பட்டது. முதல்முறையாக நடிகை மீனாக்ஷி சௌத்ரி, தளபதி விஜய் உடன் இணைந்து கதாநாயகியாக நடிக்கும் இந்த தளபதி 68 திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா, லைலா, யோகி பாபு, அரவிந்த் ஆகாஷ், வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த யுவன் சங்கர் ராஜா - தளபதி விஜய் கூட்டணி இந்த தளபதி 68 திரைப்படத்தில் இணைந்து இருக்கிறது

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “தளபதி 68 என்று வரும்போது இயக்குனர் வெங்கட் பிரபு அவருக்கென்று ஒரு ஒரு ஸ்டைல் வைத்திருப்பார். நடிகர் நடிகைகளை அறிவித்த போது அவருடைய GANG-ம் உள்ளே இருக்கிறார்கள். அவர் அவருடைய ஸ்டைலில் தளபதியை பொருத்தி பார்ப்பாரா?” எனக் கேட்ட போது,

“இல்லை எனக்கு வெங்கட் பிரபு சார் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவர் ஒரு திறமையான இயக்குனர் & எழுத்தாளர் என்பதை ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார். திரைக்கதையில் அவருக்கு ஒரு நல்ல சென்ஸ் இருக்கிறது. அவருடைய சில படங்கள் திரைக்கதை ரீதியாக மிகவும் நன்றாக இருக்கும். சரோஜா திரைப்படம் பார்த்தீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும். சென்னை 28 படம் ஜாலியாக இருக்கும். அவருடைய படங்களிலேயே எனக்கு ரொம்ப பிடித்த படம் சரோஜா. அதற்கு அடுத்து மாநாடு. இந்த இரண்டு படங்களை வைத்து பார்த்தீர்கள் என்றால் திரைக்கதையை பொறுத்த வரை அவர் அருமையாக ஒன்றை செய்து விடுவார். இந்த தளபதி 68 படத்தின் நடிகர் நடிகைகளை வைத்து பார்க்கும்போது பிரமாதமான ஒரு திரைக்கதை இருக்கும் என்றுதான் தெரிகிறது. ஒரு த்ரில்லிங்கான படமாகத்தான் இருக்கும். சாதாரண படமாக இருக்காது. த்ரில்லிங்கான, புத்திசாலித்தனமான மாநாடு மாதிரியான ஒரு படமாக தான் இருக்கும். அது என்ன எப்படி என்பது நமக்கு தெரியாது. ஆனால் கூட இருப்பவர்கள் எல்லாம் சொல்வது என்னவென்றால், “அவருடைய கரியரிலேயே சிறந்த திரைக்கதையை கண்டிப்பாக நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.” என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு அவர் அவ்வளவு உழைத்திருக்கிறார். தளபதி விஜய் அவர்கள் JUST LIKE THAT என இந்த படத்திற்கு ஓகே சொல்லி இருக்க மாட்டார். அதே மாதிரி தயாரிப்பு நிறுவனமும் இவ்வளவு நடிகர்கள் நடிகைகளை உள்ளே கொண்டு வருகிறார்கள் என்றால் அந்தக் கதை அவ்வளவு இம்ப்ரஸ் செய்திருக்கிறது. எனவே காத்திருப்போம்.” என பதிலளித்திருக்கிறார். தொடர்ந்து பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் தனஜெயன் அவர்களின் அந்த சிறப்பு பேட்டி இதோ...