சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் பிரம்மாண்டமான தங்கலான் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு... மிரட்டலான டீசர் குறித்த அதிரடி அப்டேட் இதோ!

சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,chiyaan vikram pa ranjith in thangalaan movie release date announcement | Galatta

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் சீயான் விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் கூட்டணியின் தங்கலான் திரைப்படத்தின் மிரட்டலான டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு மற்றும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்திய சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர் நடிகர் சீயான் விக்ரம். அந்த வகையில் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து பீரியட் ஆக்சன் படமாக இயக்குனர் பா.ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாகும் தங்கலான் படம் இந்திய சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத அட்டகாசமான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சீயான் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் உடன் இணைந்து பார்வதி, பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தங்கலான் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று முழுவீச்சில் வருகின்றன. இதுவரையில் இந்திய சினிமாவில் பார்த்திராத அளவிற்கு மிகப்பெரிய படமாக மிகவும் அழுத்தமான கதைக்களம் கொண்ட ஒரு எமோஷனல் பீரியட் ஆக்சன் திரில்லர் படமாக தங்கலான் திரைப்படம் ரசிகர்களுக்கு பெரிய விஷுவல் ட்ரீட்டாக வர இருக்கிறது. மேலும் ஆஸ்கார் உட்பட ஒன்பது உயரிய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் தங்கலான் திரைப்படத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர்.

3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக  தயாராகி வரும் தங்கலான் திரைப்படத்தை  PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட  பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது தங்கலான் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தங்கலான் திரைப்படத்தின் டீசர் வருகிற நவம்பர் 1ம் தேதி  வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் தங்கலான் திரைப்படம் மிகப் பிரமாண்டமாக வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

உலக அளவில் தங்கலான் திரைப்படத்தை பெரிய அளவில் வெளியிடுவதற்காக படப் குழுவினர் ஒரு மிகப்பெரிய நிறுவனத்துடன் கைகோர்த்து இருப்பதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், வருகிற ஜனவரி மாதத்தில் இந்திய சினிமா வியந்து பார்க்கும் வகையில் தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தங்கலான் திரைப்படத்தின் டீசரையும் ஒரு பிரம்மாண்ட விழா நடத்தி வெளியிடப் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் திரைப்படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்புடன் படக்குழு வெளியிட்ட அதிரடியான போஸ்டர் இதோ…
 

Even the darkest mines shall glimmer with a golden beacon of hope💫

Unveiling the #ThangalaanTeaser on 1st November 2023

The realm of #Thangalaan✨ will open its gates worldwide on 26th January 2024 #ThangalaanFromJan26 pic.twitter.com/ofPtluhoC7

— Studio Green (@StudioGreen2) October 27, 2023