விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரின் இரண்டாம் பாகம் இப்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.பிரபல இயக்குனர் பிரவீன் பென்னட் இந்த தொடரை இயக்கி வருகிறார்.திருமணம் தொடரில் நடித்து பிரபலமான சித்து இந்த தொடரின் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஆல்யா மானசா இந்த தொடரின் நாயகியாக நடித்து வந்தார்.ப்ரவீனா,சைவம் ரவி,பாலாஜி,அர்ச்சனா,வைஷு சுந்தர்,நவ்யா சுஜி,நிஹாரிகா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.350 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரின் நாயகியாக நடித்து வரும் ஆல்யா மானசா கர்பமாக இருப்பதை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்,கர்பமாக இருபத்தோடும் இந்த தொடரில் நடித்து வந்த இவர் டெலிவரி நேரத்தில் இந்த தொடரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

தற்போது இவருக்கு பதிலாக புது நடிகை இணைந்துள்ளார் என்பது ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.ஆல்யா மானசாவிற்கு பதிலாக ரியா விஸ்வநாதன் என்பவர் இந்த தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார்.இவர் ஆல்யா மானசா வரும் வரை தொடர்வாரா அல்லது இனி இவர் தான் நடிக்கிறாரா என்ற தகவல்கள் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.