விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இந்த முறையும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று 2 வாரங்களை கடந்து உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் முதல் நபராக நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் முதல் வாரத்திலேயே வெளியேறினார்.

இதனையடுத்து 2-வது வாரத்தின் முதல் நாமினேஷன் ப்ராசஸ்-ல் 15 போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு தேர்வானார்கள். அவர்களில் நாடியா சாங் முதல் நபராக எலிமினேட் செய்யப்பட்டார். தொடர்ந்து 3-வது வாரத்தின் முதல் நாளான நேற்று (அக்டோபர் 18) பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டன் தேர்வு நடைபெற்றது.

கேப்டன் தேர்வில் ராஜு, பாவனி, சிபி மற்றும் இசைவானி போட்டியிட்டனர். இதில் சிபி இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற நாமினேஷனில் அபிஷேக், பாவனி, பிரியங்கா, ஐக்கி பெர்ரி, இசைவாணி, சின்னபொண்ணு, அபினய், அக்ஷரா மற்றும் தாமரை செல்வி ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய (அக்டோபர் 19) நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியானது. பிக் பாஸ் சீசன் 5-ன் முதல் லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக பஞ்சதந்திரம் டாஸ்க் தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் போட்டியாளர் எலிமினேஷனுக்கு தேர்வாகி இருந்தால் அதிலிருந்து காப்பாற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புதிய ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.