விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று பாக்கியலக்ஷ்மி.ஒரு குடும்பத்தலைவியின் கதை என்பதால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் இன்ஸ்டன்ட் ஹிட் அடித்தது.சுசித்ரா ஷெட்டி இந்த தொடரின் முதன்மை வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.இவருக்கு ஜோடியாக சதிஷ்குமார் நடித்துள்ளார்.

விஷால்,ரித்திகா,வேலு லக்ஷ்மணன்,திவ்யா கணேஷ்,நேஹா மேனன்,கம்பம் மீனா,ஜெனிஃபர் போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்து இந்த தொடரில் நடித்து அசத்தி வருகின்றனர்.இந்த தொடருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.இந்த தொடர் குறித்து கோபி கதாபாத்திரம் குறித்தும் மீம்களை பகிர்ந்தும் ரசிகர்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர்.

வெற்றிகரமாக 250 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் நடித்து வரும் நடிகர்,நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக மாறியுள்ளனர்,ஒவ்வொருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே இந்த தொடரின் மூலம் உருவாகியுள்ளனர்.

இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்த ஜெனிஃபர் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.இவருக்கு பதிலாக பிக்பாஸ் புகழ் ரேஷ்மா நடிக்கிறார் என்பது புதிய ப்ரோமோவின் மூலம் தெரியவந்துள்ளது,மேலும் ராதிகாவின் குழந்தையாக நடித்து வரும் கதாபாத்திரமும் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.