தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தொடர்ந்து பல திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி சாதாரண மக்களின் மனதில் குடி புகுந்துள்ளார். அடுத்ததாக தொகுப்பாளராக களம் இறங்கியுள்ள நடிகர் விஜய்சேதுபதி தற்போது சின்னத்திரை வாயிலாகவும் மக்களின் மனதை கொள்ளை கொள்ள உள்ளார்.

இந்திய திரை உலகில் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ஷாருக்கான், குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், சரத்குமார், சூர்யா, மோகன்லால், அரவிந்த்சாமி, ஜூனியர் என்டிஆர், கிச்சா சுதீப், வரலட்சுமி சரத்குமார் இவர்கள் வரிசையில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுப்பாளராக சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் CHEF தமிழ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க உள்ளார். 

இதேபோல் மாஸ்டர் CHEF தெலுங்கு நிகழ்ச்சியை பிரபல நடிகை தமன்னா தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மேலும் ஒரு இந்திய நடிகர் தொகுப்பாளராகிறார். பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ரன்வீர் சிங் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் THE BIG PICTURE நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக களமிறங்க உள்ளார். 

விரைவில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சியான பிக் பிக்சர்ஸ் நிகழ்ச்சியில் நடிகர் ரன்வீர் சிங் தொகுத்து வழங்குவதை உறுதி செய்யும் வகையில் வெளியான புதிய ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் புதிய ப்ரோ மொபைல் கீழே உள்ள லிங்கில் காணலாம்.