தளபதி விஜய் நடிப்பில் 2016 சம்மருக்கு வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் தெறி.ராஜா ராணி படத்தின் வெற்றியை அடுத்து தளபதி விஜயுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்தார் அட்லீ.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.வி க்ரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

சமந்தா,ஏமி ஜாக்சன் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர்.பேபி நைனிகா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இயக்குனர் மஹேந்திரன்,பிரபு,ராதிகா,மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

குறிப்பாக இந்த படத்தில் அறிமுகமான நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பலரும் இவரது மழலை நடிப்பை பாராட்டி வந்தனர்.வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரிய வெற்றியை பெற்று தந்தது.2016-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை தெறி பெற்றிருந்தது.

ஜீ.வி.யின் 50வது படமான இந்த படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் அடித்திருந்தன.இந்த படத்தின் இரண்டு வீடியோ பாடல்கள் 100 மில்லியனை கடந்து சாதனை படைத்தன.இந்த படத்தின் ஆல்பம் மொத்தமாக யூடியூபில் 400 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ள்ளது.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.