காதல் மயக்கத்தில் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய காதலியின் புகைப்படங்களை, அந்த இளம் பெண்ணின் முன்னாள், இன்னாள் காதலர்கள், அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில்தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்து உள்ள மைக்கேல் பாளையத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு கல்லூரியில் படிக்கும் போது, திண்டுக்கல் ரெட்டை மலை பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரை, அந்த இளம் பெண் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இப்படியாக, அந்த இளம் பெண்ணும், சதீஷ் என்ற அந்த காதலனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், அவர்கள் அடிக்கடி செல்போனில் மணிக்கணக்கில் பேசி தங்களது காதலை மேலும் வளர்த்து வந்தனர்.

இப்படியான இந்த காதல் மயக்கத்தில், அந்த கல்லூரி மாணவி தனது அந்தரங்க புகைப்படங்களைக் காதலன் சதீஷ் கேட்டுக்கொண்டதற்கு இனங்க அவர் அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால், இதனையடுத்து காதலர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, காதலர்கள் இருவரும்  பிரிந்து உள்ளனர். 

இதனையடுத்து, அந்த கல்லூரி மாணவிக்கு ஃபேஸ்புக் மூலமாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த அருண் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. 

இருவருக்குள்ளான இந்த நட்பு, அதன் பிறகு அவர்களுக்குள் காதலாக மாறியிருக்கிறது. 

இந்த காதல் விஷயம், அந்த இளம் பெண்ணின் முன்னாள் காதலன் சதீசுக்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அவர், அந்த காதலனின் நண்பரான மைக்கேல் பாளையத்தைச் சேர்ந்த நெல்சன் அருணின் செல்போனை நம்பரை  பெற்றுக்கொண்டு, தனது முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்துப் பேசியிருக்கிறார்.

இருவரிடம் இருந்த புகைப்படங்கள் அவர்களின் நண்பர்களான மைக்கேல் பாளையம் நெல்சன், தூத்துக்குடி விஷ்வா ஆகியோருக்கும் சென்று உள்ளது. இப்படியாக, வரிசையாக கைமாறிய இந்த ஆபாச படங்கள், அடுத்த சில நாட்களில் சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளன. 

இப்படியாக, தனது அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை அறிந்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த கல்லூரி மாணவி மற்றும் அவரது பெற்றோர்கள், இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த திண்டுக்கல் சதீஷ், மைக்கேல் பாளையம் நெல்சன், தூத்துக்குடி அருண், விஷ்வா  ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, சதீஷ், நெல்சன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பின்னர், இருவரையும் திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

அத்துடன், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான தூத்துக்குடியைச் சேர்ந்த அருண், விஸ்வா, ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.