தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்து இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை , சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் புதிய படம், பாலிவுட்டில் நடிகை அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து மௌனத் திரைப்படம் என அடுத்தடுத்து நடித்துவரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் முகிழ்.

விஜய் சேதுபதியும் அவரது மகளான ஸ்ரீஜா விஜய் சேதுபதியும் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ரெஜினா கெஸன்ட்ரா நடித்துள்ளார். 62 நிமிடங்கள் நம் மனதோடு பயணிக்கும் அழகிய திரைப்படமாக தயாராகியிருக்கும் முகிழ் படத்திற்கு, சத்தியா பொன்மார் ஒளிப்பதிவு செய்ய கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். ரெவா இசையில் பாடல்களை இயக்குனர் பாலாஜி தரணிதரன் எழுதியுள்ளார்.

இயக்குனர் எஸ்.கார்த்திக் எழுதி இயக்கியுள்ள முகிழ் படத்தை விஜய் சேதுபதி புரோடக்சன்ஸ் மற்றும் பாக்கெட் மணி பிலிம்ஸ் புரோடக்சன்ஸ் இணைந்து  வழங்குகிறது. வருகிற அக்டோபர் 8ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம் ரிலீசாகிறது. இந்நிலையில் தற்போது முகிழ் படத்தின் டீசர் வெளியானது. அழகான அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.