விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பிரமாண்டமாக தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 5. இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டின் முதல் வாரத்திற்கான கேப்டன்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ராஜு பாத்ரூம் சுத்தம் செய்யும் அணிக்கும், பாடகி சின்னப்பொண்ணு சமையல் அணிக்கும், பாவனி ஹவுஸ் கீப்பிங் அணிக்கும், நமிதா பாத்திரம் கழுவும் அணிக்கும் கேப்டன்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஆனாலும் முதல் வாரத்திற்கான பிக்பாஸ் வீட்டின் கேப்டன் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

தொடர்ந்து ராஜு ஜெயமோகன் பேய் கதை சொல்ல கள்ளம் கபடமற்ற தாமரைச்செல்வி அதைக்கேட்டு பயந்து அலற என பிக்பாஸ் வீடு நேற்று கலகலப்பானது. அதைத் தொடர்ந்து சற்றுமுன் வெளியான இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் பாடகி இசைவாணி தான் கடந்து வந்த கடினமான பயணம் குறித்து பேச மற்ற ஹவுஸ்மேட்கள் அனைவரும் கண் கலங்கினர்.

இந்நிலையில் தற்போது அடுத்த ப்ரோமோ வீடியோ வெளியானது. இதில் தனது கடினமான பயணத்தை பற்றி பேசிய பாடகி சின்ன பொண்ணுக்கு மற்ற போட்டியாளர்கள் அனைவரும் லைக் மற்றும் ஹார்ட் கொடுக்க நடிகர் ராஜீவ் ஜெயமோகன் மட்டும் டிஸ்லைக் கொடுத்துள்ளார். அதற்கான காரணத்தையும் சொல்கிறார். இன்று ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 புதிய ப்ரோமோ கீழே உள்ள லிங்கில் காணலாம்.