100 நாட்கள் 18 போட்டியாளர்கள் என பிரம்மாண்டமாக தொடங்கியிருக்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 5. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று 18 போட்டியாளர்களில் இருந்து பிக் பாஸ் வீட்டின் முதல் வாரத்திற்கான கேப்டன்கள் தேர்வு நடைபெற்றது. 

இதில் ராஜு ஜெயமோகன், நமிதா மாரிமுத்து, பாவனி ரெட்டி மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் பாத்ரூம் சுத்தம் செய்வது பாத்திரம் கழுவுவது ஹவுஸ் கீப்பிங் மற்றும் சமையல் ஆகிய அணிகளுக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி பிரியங்காவின் பன்ச் கோஷமும், ராஜூ ஜெயமோகன் தாமரைச்செல்வி பேய் கதையும் என கலகலப்பாக நிறைவடைந்தது. 

தொடர்ந்து இன்றைய நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகின. அதில் இசைவாணி தனது வாழ்க்கையில் கடந்து வந்த கடினமான பயணத்தைப் பற்றி பேச போட்டியாளர்கள் கண்கலங்கினர். அடுத்து சின்னப்பொண்ணு தன் பயணத்தைப் பற்றி பேசி முடித்ததும் மற்ற போட்டியாளர்கள் லைக் & ஹார்ட் கொடுக்க ராஜு டிஸ்லைக் கொடுத்து அதற்கான காரணத்தையும் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 3-வது ப்ரோமோவில் நடிகை பாவனி ரெட்டி தனது கணவரை இழந்த நிகழ்வைப் பற்றி இசைவானி உடன் பகிர்ந்து கொண்டிருக்கும் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.