தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா.அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகராக மாறினார்,குறிப்பாக பெண்களின் மனம் கவர்ந்த கனவு கண்ணனாக மாறினார் விஜய் தேவர்கொண்டா.பெண்கள் மட்டுமின்றி பல இளைஞர்களின் மனதிலும் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.

இவர் நடித்துள்ள லிகர் திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்த்து JGM என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.தற்போது இவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.Shiva Nirvana இந்த படத்தினை இயக்குகிறார்.Hesham Abdul Wahab இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்த படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.பூஜையில் படத்தின் முக்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர்.இந்த பூஜையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகின்றன.