இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான சூதுகவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அசோக்செல்வன். அடுத்தடுத்து பீட்சா 2 மற்றும் தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்து குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் உயர்ந்தார்.

கடைசியாக அதோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள் மன்மத லீலை ஆகியப் படங்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக நித்தம் ஒரு வானம் மற்றும் ஆகாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அடி கப்பயர கூட்டமணி படத்தின் தமிழ் ரீமேக்காக அசோக்செல்வன் நடித்துள்ள திரைப்படம் ஹாஸ்டல். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் ஹாஸ்டல் படத்தில் சதீஷ், நாசர், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஹாஸ்டல் படத்திற்கு பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்ய, போபோ ஷஷி இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 28-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஹாஸ்டல் படம் ரிலீசாகவுள்ள நிலையில் ஹாஸ்டல் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. கலகலப்பான ஹாஸ்டல் படத்தில் ட்ரைலர் இதோ…