தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த முன்னணி இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். குறிப்பாக நடிகராக விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

அந்த வகையில் விஜய் ஆன்டனியின் நடிப்பில்  தமிழரசன், காக்கி மற்றும் அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்களும் நிறைவடைந்து விரைவில் ரிலீஸாக தயாராகி வருகின்றன. அடுத்ததாக இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து தமிழ் படம் படத்தின் இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக தயாராகி வரும் ரத்தம் படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. முன்னதாக இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. 

விஜய் ஆண்டனி முதல் முறை இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது. ஓம் நாராயண் ஒளிப்பதிவில், லியோ ஜான்பால் படத்தொகுப்பு செய்யும் பிச்சைக்காரன் 2 படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்திலிருந்து ஆன்டி பிகிலி தீம் பாடல் தற்போது வெளியானது. அட்டகாசமான ஆன்டி பிகிலி பாடல் இதோ…