தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக  சில தினங்களுக்கு முன் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸான திரைப்படம் FIR. இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த FIR திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில் தொடர்ந்து அமேசான் பிரைம் வீடியோவிலும் ரிலீசாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில்   இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடித்த முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மிக முக்கிய படங்களாக அமைந்தன. 

அந்த வகையில் விஷ்ணு விஷால் நடிப்பில் ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ளது திரைப்படம் மோகன்தாஸ். இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமரன், பிக்பாஸ் ஷாரிக்,கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மோகன்தாஸ் திரைப்படத்திற்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவில் சுந்தரமூர்த்தி.KS இசையமைக்க அன்பறிவு சகோதரர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.இந்நிலையில் விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. சமூகவலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள மோகன்தாஸ் டீசர் இதோ…