இந்திய திரை உலகின் உச்ச நட்சத்திரமாகவும் தெலுங்கு சினிமாவின் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும்  மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் அவரது மகன் நடிகர் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் போலா ஷங்கர் படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி அடுத்ததாக புஷ்பா திரைப்படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளாதாக தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக சில அறிவிக்கப்பட்டது. மேலும் பிரபல தெலுங்கு இயக்குனர் பாபி இயக்கத்தில் #MEGA154 திரைப்படத்தில் நடிக்கவுள்ள சிரஞ்சீவி இதனையடுத்து இளம் இயக்குனர் வெங்கி குடுமலா இயக்கும் #Chiru156 புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். 

இந்த வரிசையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான லூசிபர் படத்தின் ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் காட்ஃபாதர் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிரஞ்சீவி. கோனிடெல்லா புரோடக்சன் கம்பனி மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் காட்ஃபாதர் படத்தில் நயன்தாரா, சத்யதேவ் காஞ்சர்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நீரவ்ஷா ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் காட்ஃபாதர் படத்திற்கு S.தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் காட்ஃபாதர் படத்தில் முக்கியமான கௌரவ தோற்றத்தில் நடிக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் சிரஞ்சீவியுடன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி சல்மான்கானுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் காட்ஃபாதர் படத்தில் இணைந்துள்ளது திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.