பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த விஜய் ஆண்டனி.. முதல் நாளிலே கோடிகளை குவித்த ‘பிச்சைக்காரன் 2’ – வைரல் பதிவு இதோ..

பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வைரல் பதிவு -  Pichaikkaran 2 first day collection  report | Galatta

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. விஜய் ஆண்டனியின் பாத்திமா ஆண்டனி பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவான இப்படத்தினை விஜய் ஆண்டனியே இயக்கி இசையமைத்து படத்தொகுப்பு செய்து நடித்துள்ளார்.  பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் காவ்யா தாப்பர், ராதாரவி, யோகிபாபு, மன்சூர் அலிகான், ஒய் ஜீ மகேந்திரன், ஹரீஷ் பேரடி, ஜான் விஜய், தேவ்கில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

மூளை மாற்று அறுவை சிகிச்சை திரைப்படமாக உருவான இப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி படத்திற்கான எதிர்பார்பை அதிகரித்தது.  அதன்படி நேற்று பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியானது. ரசிகர்களின் பேராதரவுடன் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்திற்காக விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு.

 

🔥BLOCKBUSTER🔥 pic.twitter.com/oZcT5gHED6

— vijayantony (@vijayantony) May 20, 2023

அதன்படி தமிழில் வெளியான பிச்சைகாரன் 2  திரைப்படம் ஒரே நாளில் 3.25 கோடியை உலகமெங்கும் வசூலித்துள்ளது. அதைதொடர்ந்து தெலுங்கில் ‘பிச்சக்காடு 2’ திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டும் 4.5 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த அறிவிப்புடன் விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் இதுவே அதிக வசூல் என்ற சாதனையையும் படைத்துள்ளது என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் படி விஜய் ஆண்டனிக்கு தமிழை காட்டிலும் அதிகப்படியான ரசிகர் பட்டாளம் தெலுங்கு மாநிலங்களில் உருவாகியுள்ளது என்பது தெரிய வருகிறது. முதல் நாளில் கோடிகளை குவித்த பிச்சைக்காரன் 2 திரைப்பட குழுவினருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உருகும் வடிவேலுவின் குரல்.. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான ‘மாமன்னன்’ முதல் பாடல்.. – அட்டகாசமான காட்சிகளுடன் வைரலாகும் பாடல் இதோ..
சினிமா

உருகும் வடிவேலுவின் குரல்.. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான ‘மாமன்னன்’ முதல் பாடல்.. – அட்டகாசமான காட்சிகளுடன் வைரலாகும் பாடல் இதோ..

பிக்பாஸ் ரைசாவுக்கு என்ன ஆச்சு..? கண்ணீருடன் வெளியான புகைப்படங்கள்.. – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

பிக்பாஸ் ரைசாவுக்கு என்ன ஆச்சு..? கண்ணீருடன் வெளியான புகைப்படங்கள்.. – வைரலாகும் பதிவு இதோ..

Fan boy சம்பவத்திற்கு ரெடியா? உலகநாயகன் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு அட்டகாசமான ட்ரீட்.. – வைரலாகும் அறிவிப்பு இதோ...
சினிமா

Fan boy சம்பவத்திற்கு ரெடியா? உலகநாயகன் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு அட்டகாசமான ட்ரீட்.. – வைரலாகும் அறிவிப்பு இதோ...