அடுத்த Pan India ஹிட்டிற்கு திட்டம் போட்ட ‘கே.ஜி.எஃப்’ இயக்குனர்.. – ஜூனியர் NTR கூட்டணியில் உருவாகும் புது பட அப்டேட் இதோ..

கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு விவரம் இதோ - KGF Director Next project with Jr NTR here is the update | Galatta

கடந்த 2018 ம் ஆண்டு  பான் இந்திய அளவு வெளியான கன்னட திரைப்படம் ‘கேஜிஎஃப்’ இரண்டு பாகங்களான கேஜிஎஃப் திரைப்படத்தின் முதல் பாகம் 2018 ல் வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. வசூல் அடிப்படியில் கோடிகளை வேட்டையாடிய கேஜிஎஃப் திரைப்படம்  கடந்த 2022 ம் ஆண்டு கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தினை வெளியிட்டது. எதிர்பார்ப்பின் உச்சத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை அளித்து கேஜிஎஃப் 2 திரைப்படத்தை இமாலய வெற்றி பெற செய்தனர். இரண்டு பான் இந்திய ஹிட் திரைப்படங்களை முடித்து கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் கூட்டணியில் ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மைத்ரி மூவீஸ் மற்றும் நந்தமுரி தாரகா ராமாராவ் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் கதாநயாகனாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘JR31’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ரசிகர்களால் பெரிதும் தெரிந்த தகவலை தற்போது படக்குழு உறுதி படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தினை வரும் 2024 மார்ச் மாதத்திலிருந்து படப்பிடிப்பை துவங்க உள்ளதாக கூடுதல் அப்டேட்டுடன்  ஜூனியர் என்டி ஆர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

 

Team #NTR31 wishes @tarak9999 a very Happy Birthday 🔥🔥

On to the sets from March 2024 💥💥#HappyBirthdayNTR#PrashanthNeel @MythriOfficial pic.twitter.com/Csn9OVIE9x

— NTR Arts (@NTRArtsOfficial) May 20, 2023

இந்த அறிவிப்பினை ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். இன்று தனது 40 வது பிறந்தாநாளை கொண்டாடி வரும் தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டி ஆர் அவர்களுக்கு  திரைபிரபலங்கள் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘RRR’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது பிரபல இயக்குனர்  கோரட்டலா சிவா இயக்கத்தில் ‘தேவரா’ படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் #NTR31 நடிக்கவுள்ளார். இதனிடையே ஜூனியர் என்டிஆர் பிரபல பாலிவுட் திரைப்படமான ‘வார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#Devara pic.twitter.com/bUrmfh46sR

— Jr NTR (@tarak9999) May 19, 2023

இந்த தகவலை உறுதிபடுத்தும் வகையில் வார் பட நாயகன் ரித்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வார் 2 திரைப்படம் குறித்து தகவலையும் பகிர்ந்துள்ளார். அதில் “யுத்த பூமியில் (வார்) உங்களை சந்திக்க காத்திருக்கிறேன் நண்பா” என்று குறிப்பிட்டுள்ளார். இதைதொடர்ந்து மிகுந்த உற்சாகத்தில் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் அப்பதிவினை வைரலாக்கி வருகின்றனர்.

Happy Birthday @tarak9999! Wishing you a joyous day and an action packed year ahead. Awaiting you on the yuddhabhumi my friend. May your days be full of happiness and peace

…until we meet 😉

Puttina Roju Subhakankshalu Mitrama 🙏🏻

— Hrithik Roshan (@iHrithik) May 20, 2023

நண்பனை திருமணம் செய்யவிருக்கும் கனா காணும் காலங்கள் பிரபலம் தீபிகா.. - குவியும் வாழ்த்துகள்.. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

நண்பனை திருமணம் செய்யவிருக்கும் கனா காணும் காலங்கள் பிரபலம் தீபிகா.. - குவியும் வாழ்த்துகள்.. வைரலாகும் பதிவு இதோ..

ஜல்லிக்கட்டு தீர்ப்பிற்கு ஆதரவு தந்த 'வாடிவாசல்' நாயகன் சூர்யா.. - இணையத்தில் வைரலாகும் பதிவு.. விவரம் இதோ..
சினிமா

ஜல்லிக்கட்டு தீர்ப்பிற்கு ஆதரவு தந்த 'வாடிவாசல்' நாயகன் சூர்யா.. - இணையத்தில் வைரலாகும் பதிவு.. விவரம் இதோ..

ஆக்ஷனில் மாஸ் காட்டும் மக்கள் செல்வன்.. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படக்குழு வெளியிட்ட அதிரடி Glimpse.. – வைரல் வீடியோ இதோ..
சினிமா

ஆக்ஷனில் மாஸ் காட்டும் மக்கள் செல்வன்.. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படக்குழு வெளியிட்ட அதிரடி Glimpse.. – வைரல் வீடியோ இதோ..